கிரிக்கெட் (Cricket)

சிக்ஸ் அடிச்சா இடிந்து விழுந்திரும்.. கான்பூர் மைதானத்தின் அவல நிலை.. ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2024-09-26 03:44 GMT   |   Update On 2024-09-26 03:44 GMT
  • கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் சி பால்கனி தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.
  • ஒருவேளை ரிஷப் பண்ட் அடிப்பதை பார்த்து வெறும் 50 ரசிகர்கள் துள்ளிக் குதித்தால் கூட அந்த தளம் தாங்காது.

வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது,. இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது போட்டி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கும் க்ரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கும் அந்தப் போட்டிக்காக கான்பூர் சென்றடைந்துள்ள இந்திய அணியினர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் சி பால்கனி தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் 4800 ரசிகர்கள் அமரக்கூடிய அந்த தளத்தில் 1700 பேர் மட்டுமே போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்த தளம் வலுவாக இல்லை என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதை சீரமைக்க நாட்கள் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது பற்றி மைதான இன்ஜினியர் கூறியதாவது:-

ஒருவேளை ரிஷப் பண்ட் அடிப்பதை பார்த்து வெறும் 50 ரசிகர்கள் துள்ளிக் குதித்தால் கூட அந்த தளம் தாங்காது. மிகவும் மோசமாக உள்ள அந்த தளம் சீரமைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் பிசிசிஐ மீது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திய வருகிறார்கள்.

Tags:    

Similar News