வங்கதேச டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு- அதிவேக புயல் மயங்க் யாதவ் தேர்வு
- வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
- 3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வு
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (WK) , ரிங்கு சிங் ,ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி ,சிவம் துபே ,வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 150 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.