டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்: ஆஸ்திரேலிய வீராங்கனை சாதனை
- நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
- மொத்தமாக இதுவரை 46 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஸ்கட் 3.2 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன்மூலம் அவர் டி20 உலகக் கோப்பையில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பெண்கள் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் ஷப்னின் இஸ்மாயில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் 41 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 40 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளன.
மேகன் ஸ்கட் 26 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் படைத்தார்.