கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள்.. 2-வது இடத்துக்கு போட்டி போடும் மந்தனா- கவுர்

Published On 2024-10-28 10:17 GMT   |   Update On 2024-10-28 10:17 GMT
  • ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
  • 2-வது இடத்துக்கு மந்தனா- ஹர்மன்பிரீத் கவுர் இடையே போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு இடங்கள் முறையே ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 87 போட்டியில் விளையாடி 3590 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். கவுர் 115 போட்டிகளில் விளையாடி 3589 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 1 ரன்னில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

Tags:    

Similar News