எம்.எஸ். டோனியை மன்னிக்கவே மாட்டேன்: யுவராஜ் சிங் தந்தை சொல்கிறார்
- எம்.எஸ். டோனி தலைமையின் கீழ் யுவராஜ் சிங் நீண்ட காலமாக விளையாடினார்.
- 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் சிங் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.
இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார்.
இந்த நிலையில் எம்.எஸ். டோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் கூறியதாவது:-
நான் எம்.எஸ். டோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு (யுவராஜ் சிங்) எதிரான என்ன செய்தார்? என்பதெல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாள் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.
நான் எனது வாழ்வில் இரணடு விசயங்களை செய்தது கிடையாது. முதல் விசயம், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. 2-வது, எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஒருபோதும் என வாழ்வில் கட்டிப்பிடிக்கமாட்டேன்.
இவ்வாறு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே தோல்விக்கு டோனியின் மோசமான செயல்கள்தான் காரணம். யுவராஜ் சிங் மீது டோனி பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.