டோனி, கபில் தேவ் இல்லாத ஆல்டைம் லெவன் அணியை தேர்வு செய்த டிகே- ரசிகர்கள் அதிர்ச்சி
- துவக்க வீரர்களாக சேவாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
- விராட் கோலியை 5-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்த்திக் தன்னுடைய கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தரமான வீரர்களை கொண்ட ஆல் டைம் கனவு அணியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் எம்எஸ் டோனி இல்லாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.
அதே போல 1983 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கபில் தேவ் வரலாற்றின் மகத்தான ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் அவரையும் தினேஷ் கார்த்திக் தனது அணியில் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமாக அமைகிறது.
அவருடைய அணியில் துவக்க வீரர்களாக சேவாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் பெருஞ்சுவரான ராகுல் டிராவிட் 3-வது இடத்திலும் சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும் தேர்வாகியுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை 5-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார். -
அதைத் தொடர்ந்து இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனான யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அவர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஸ்பின்னர்களாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜாகீர் கான் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவை தேர்ந்தெடுத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணி:
வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான். 12-வது வீரர் : ஹர்பஜன் சிங்