கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் முக்கிய வீரர் அதிரடி நீக்கம்

Published On 2024-08-29 14:37 GMT   |   Update On 2024-08-29 14:37 GMT
  • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
  • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த போட்டி முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறுகையில், ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சில குறை இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக பயிற்சி செய்யப் போகிறார். மேலும், அவருக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய பாகிஸ்தான், 2-வது டெஸ்டில் அப்ரார் அகமத் என்ற லெக் ஸ்பின்னரையும், மிர் ஹம்ஸா என்ற வேகப்பந்துவீச்சாளரையும் சேர்த்துள்ளது.

Tags:    

Similar News