கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லையா? கேப்டன் கையை தட்டி விட்ட அப்ரிடி- வைரல் வீடியோ

Published On 2024-08-26 04:33 GMT   |   Update On 2024-08-26 04:33 GMT
  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
  • இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

வங்கதேச அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றத்திற்குப் பிறகு வெளியான ஒரு வீடியோ, அந்த அணியின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

அந்த வீடியோவில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகின், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சிலர் கேப்டனை அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு அவமதிப்பது அணிக்கு நல்லதல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இதுபோன்ற செயல்களால் வெற்றிபெற முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானிடம் தொடர்ந்து 13 முறை தோல்வியை சந்தித்த வங்கதேசம் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 தோல்விகள் என்ற தொடர் தோல்வி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News