கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா ஓய்வு குறித்து பரவும் செய்திகள்: துணைக் கேப்டன் சுப்மன் கில் சொல்வது என்ன?

Published On 2025-03-08 21:24 IST   |   Update On 2025-03-08 21:53:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
  • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால் கேப்டனாக நீடிப்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு பின் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததிலிருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை முன்வைத்து அவரை கேப்டன் பதிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ததாக உறுதியான தகவல் வெளியாகி இருந்தன.

தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நாளை நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. மேலும் ஓய்வு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து புதிதாக ஆலோசனை நடத்தப்படும்.

இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இது தொடர்பாக கூறியதாவது:-

தற்போது வரை நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், சாம்பியன் டிராபியில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளளோபம். ரோகித் சர்மா என்னிடமோ அல்லது அணியிடமோ அவருடைய ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை. ரோகித் சர்மா அப்படி ஒரு நினைப்பில் இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு ரோகித் சர்மா விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News