கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்காக அதிக சதம்.. மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த மந்தனா

Published On 2024-10-29 16:06 GMT   |   Update On 2024-10-29 16:06 GMT
  • நியூசிலாந்துக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் மந்தனா சதம் விளாசினார்.
  • மிதாலி ராஜ் 211 போட்டிகள் விளையாடி 7 சதங்கள் அடித்துள்ளார்.

அகமதாபாத்:

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என கணக்கில் தொடர் சமனில் இருந்தது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார். இது அவருக்கு 8-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய மிதாலி ராஜ் சாதனை மந்தனா முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் மந்தனா 8 சதங்களுடன் முதல் இடத்திலும் மிதாலி ராஜ் 7 சதங்களுடன் 2-வது இடத்திலும் கவுர் 6 சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மிதாலி ராஜ் 211 போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ளார். மந்தனா வெறும் 88 போட்டிகளில் 8 சதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.

Tags:    

Similar News