கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி: ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி ஆப்கானிஸ்தான் சாதனை

Published On 2024-09-22 18:08 GMT   |   Update On 2024-09-22 18:08 GMT
  • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
  • அந்த அணியின் குர்பாஸ் 89 ரன்னில் அவுட்டானார்.

ஷார்ஜா:

ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.

டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News