கிரிக்கெட்
null

ஒரே ஓவரில் 30 ரன்கள்.. சாதனை பட்டியலில் இடம் பிடித்த டிராவிஸ் ஹெட்

Published On 2024-09-12 09:30 GMT   |   Update On 2024-09-12 09:31 GMT
  • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
  • சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் விளாசினார்.

சவுத்தம்டன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 19.2 ஓவர்களில் 151 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்னும் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அவர் சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் (4,4,6,6,6,4) எடுத்து முத்திரை பதித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹெட் இடம் பிடித்துள்ளார்.

அந்த பட்டியல் பின்வருமாறு:-

ரிக்கி பாண்டிங் 30 ரன்கள் (நியூசிலாந்து) 2005

ஆரோன் பிஞ்ச் / கிளென் மேக்ஸ்வெல் 30 (பாகிஸ்தான்) 2014

டான் கிறிஸ்டியன் 30 (வங்கதேசம்) 2021

மிட்செல் மார்ஷ் 30 (ஸ்காட்லாந்து) 2024

டிராவிஸ் ஹெட் 30 (இங்கிலாந்து) 2024

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News