கிரிக்கெட் (Cricket)
null

இந்த சூழ்நிலையை பார்க்க விரும்பினேன்- வெற்றிக்கு பங்காற்றிய மிடில் ஆர்டர் குறித்து சூர்யகுமார் கருத்து

Published On 2024-10-10 02:54 GMT   |   Update On 2024-10-10 02:59 GMT
  • 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன்.
  • 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன்.

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2 - 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது.

41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இது போன்ற சூழ்நிலையை நான் பார்க்க விரும்பினேன். 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன். ஐபிஎல் அணிக்காகவும் வலைப்பயிற்சியிலும் என்ன செய்கிறீர்களோ அதை இந்திய அணிக்காக செய்யுங்கள் என்று வீரர்களிடம் கூறியுள்ளேன். ஜெர்ஸி மட்டுமே மாறும். மற்ற அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளேன்.

சில நேரங்களில் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தரால் பந்து வீச முடியாது. அதனால் 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன். எனவே ஹர்திக் பாண்டியா இல்லாமல் அதிகமான பவுலர்களை பயன்படுத்தினேன். இது நித்திஷ் ரெட்டியின் நாள். எனவே அவருக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பினேன்.

என்று சூர்யகுமார் கூறினார். 

Tags:    

Similar News