கிரிக்கெட் (Cricket)

பிலிப்ஸ் சால்ட், மூஸ்லி அரை சதம்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 264 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

Published On 2024-11-06 21:57 GMT   |   Update On 2024-11-06 21:57 GMT
  • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
  • அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 263 ரன்கள் எடுத்துள்ளது.

பார்படாஸ்:

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாசில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்கத்தில் ரன்கள் சேர்க்க திணறியது. 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 5வது மற்றும் 6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தார்.

பிலிப்ஸ் சால்ட் 74 ரன்னும், டான் மூஸ்லி 57 ரன்னும் எடுத்தனர். சாம் கர்ரன் 40 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 38 ரன்கள் குவித்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

Tags:    

Similar News