மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஏ பிரிவில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும் மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.