கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 உலகக் கோப்பை- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Published On 2024-10-06 13:22 GMT   |   Update On 2024-10-06 13:22 GMT
  • டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது
  • பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்தது

துபாய்:

9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.

தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிடா தார் 28 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Tags:    

Similar News