விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதியில் ஏமாற்றம் அளித்த தீபிகா குமாரி
- வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
- ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதி சுற்றில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.
இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனை நாம் சு ஹியோனிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே நடந்த வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.