விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: நெதர்லாந்துடனான காலிறுதியில் திரில் வெற்றி பெற்றது இந்தியா

Published On 2023-12-12 12:23 GMT   |   Update On 2023-12-12 12:23 GMT
  • ஒரு கட்டத்தில் நெதர்லாந்து 3-2 என முன்னிலை வகித்தது.
  • இதில் சுதாரித்துக் கொண்ட இந்தியா சிறப்பாக ஆடி 4-3 என வெற்றி பெற்றது.

கோலாலம்பூர்:

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். இதில் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியின் காலிறுதி சுற்றில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஒரு கட்டத்தில் 2-3 என நெதர்லாந்து முன்னிலை வகித்தது.

இதனால் சுதாரித்துக் கொண்ட இந்தியா சிறப்பாக ஆடியதில் 4-3 என அபார வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.

இதன்மூலம் காலிறுதியில் வென்ற இந்தியா வரும் 14-ம் தேதி அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது.

Tags:    

Similar News