ரியல் மாட்ரிட் அணிக்காக இத்தனை கோல் என்ற எல்லை கிடையாது: எம்பாப்பே
- இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
- முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.