லா லிகா: ரியல் மாட்ரிட் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் எம்பாப்பே
- பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
- இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.
இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.
இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.