கால்பந்து

பார்சிலோனா அருகே லாமின் யமன் தந்தைக்கு கத்திக்குத்து

Published On 2024-08-15 11:32 GMT   |   Update On 2024-08-15 11:32 GMT
  • பார்க்கிங் இடத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
  • மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவரை தேடிவருகின்றனர்.

17 வயதான இளம் கால்பந்து வீரர் லாமின் யமல். ஸ்பெயின் அணிக்காக யூரோ-2024 தொடரில் களம் இறங்கி அசத்தினார். பிரான்ஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். அத்துடன் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார். தற்போது கால்பந்து பயிற்சியில் தீவிரமாக உள்ளார்.

இவரது தந்தை மௌனிர் நஸ்ராயுய். இவர் நேற்று பார்சிலோனா அருகே கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். மட்டாரோ நகர் அருகே இரவு நேரத்தில் பார்க்கிங் இடத்தில் சிலர் இவரை கைத்தியால் குத்தியுள்ளனர். கேன் ருட்டியில் உள்ள படாலோனாவின் புஜோல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்துக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். சந்தேகத்திற்குரிய நான்காவது நபரை போலீசார் தேடு வருகின்றனர். 

Tags:    

Similar News