விளையாட்டு

ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்தியா: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Published On 2024-08-08 15:07 GMT   |   Update On 2024-08-08 15:07 GMT
  • இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
  • இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.

புதுடெல்லி:

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.

இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News