விளையாட்டு

உலகின் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்: ஹர்மன்பிரித் பெருமிதம்

Published On 2024-08-08 16:15 GMT   |   Update On 2024-08-08 16:15 GMT
  • உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
  • இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பாரீஸ்:

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.

இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:

இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.

நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.

நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.

எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.

ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News