விளையாட்டு

சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை கனகலட்சுமிக்கு வெண்கலம்

Published On 2024-09-16 04:50 GMT   |   Update On 2024-09-16 04:50 GMT
  • சீனியர் பிரிவில் தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெண்கலம் பதக்கம் வென்றார்.
  • அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவியிடம் தோற்றார்.

புதுடெல்லி:

இந்திய வாள்வீச்சு சம் மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இதில் இந்தியா, ஆஸ்திரியா, நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த 53 வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 6 பேர் இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சீனியர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெண்கலம் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். சேலத்தை சேர்ந்த அவர் தனிநபர் பிரிவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவியிடம் தோற்றார்.

வெண்கலம் வென்ற கனகலட்சுமியை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணாமூர்த்தி ஆகியோர் பாராட்டினார்கள்.

ஆஸ்திரியாவை சேர்ந்த புருஜ்ஜர் லில்லி தங்கமும், சோனியா தேவி வெள்ளியும், மற்றொரு இந்திய வீராங்கனை கனுபிரியா வெண்கலமும் பெற்றனர்.

Tags:    

Similar News