கிரிக்கெட் (Cricket)
null

நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்

Published On 2024-06-19 04:42 GMT   |   Update On 2024-06-19 05:20 GMT
  • நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது.
  • குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் இருப்பதும் முக்கியமாக உள்ளது.

நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். மேலும் 2024-25 ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகி உள்ளார்.

இது தொடர்பாக கேன் வில்லியம்சன் கூறுகையில்,

நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராக உள்ளேன்.

வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.

நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் இருப்பதும் முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில் வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்யவும் தயார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News