விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்ஷயா சென்

Published On 2024-08-01 12:56 GMT   |   Update On 2024-08-01 12:56 GMT
  • இந்திய வீரர் லக்‌ஷயா சென் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
  • இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாயுடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

இறுதியில், லக்ஷயா சென் 21-12, 21-6 என வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

Tags:    

Similar News