விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2024-05-23 09:08 GMT   |   Update On 2024-05-23 09:08 GMT
  • பிவி சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
  • இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 59 நிமிடங்கள் தேவைப்பட்டது.

கோலாலம்பூர்:

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சிம் யூ ஜின்னை எதிர்கொண்டார்.

இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக

சிம் யூ ஜின் 21-12 என 2வது செட்டை வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிவி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.

பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா 2வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News