விளையாட்டு
இங்கிலாந்தில் மேரி கோமுக்கு குளோபல் இந்தியன் ஐகான் விருது வழங்கி கெளரவம்
- உலக குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4-வது இடத்தில் மேரி கோம் உள்ளார்.
- 40 வயதான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மேரி கோம் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான மோரி கோம், பத்ம விபூசண் விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆவார்.
சர்வதேச குத்துச்சண்டை மையத்தின் (AIBA) தரவரிசையில், உலக குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4-வது இடத்தில் மேரி கோம் உள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் வின்ட்சரில் ஆண்டுதோறும் நடைபெறும் UK-இந்தியா விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டின் குளோபல் இந்தியன் ஐகான் விருது மேரி கோமுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இங்கிலாந்திற்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமியிடமிருந்து 40 வயதான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மேரி கோம் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.