விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-25 16:54 GMT   |   Update On 2024-07-25 16:54 GMT
  • ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
  • இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

பாரீஸ்:

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2013 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , சீனா 1998 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News