விளையாட்டு

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்- வராலாற்று சாதனை படைத்த பூஜா தோமர்

Published On 2024-06-09 16:44 GMT   |   Update On 2024-06-09 16:44 GMT
  • இந்தியர்களாக நாங்கள் எல்லா வழிகளிலும் முன்றனேறி செல்கிறோம்.
  • இந்த வெற்றி எனது வெற்றி அல்ல. அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மற்றும் அனைத்து இந்திய போட்டயாளர்களுக்குமானது.

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பூஜா தோமர் பிடித்துள்ளார். இந்தியாவின் பூஜா தோமர். UFC லூயிஸ்வில்லே 2024 தொடாரில் பிரேசில் வீராங்கனை எதிராக வெற்றி பெற்று இந்த சாதனை புரிந்துள்ளார்.

பெண்களுக்கான ஸ்ட்ராவெயிட் பிரிவில் இந்தியாவின் பூஜா தோமர், பிரேசில் நாட்டு வீராங்கனையான ரேயான் டோஸ் சாண்டோஸை 30-27, 27-30, 29-28 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆனார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியர்கள் போராட்டை வெளிப்படுத்துபவர்கள், தோற்பவர்கள் அல்ல என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறேன். இந்தியர்களாக நாங்கள் எல்லா வழிகளிலும் முன்றனேறி செல்கிறோம். இதை நிறுத்தப் போவதில்லை. விரைவில் UFC சாம்பியனாவோம்.

இந்த வெற்றி எனது வெற்றி அல்ல. அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மற்றும் அனைத்து இந்திய போட்டயாளர்களுக்குமானது. நான் இந்திய கொடியுடன் இந்திய பாடலை பாடிக்கொண்டு வெளியே சென்றபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். அப்போது எனக்கு புல்லறித்தது.

இவ்வாறு பூஜா கூறினார்.

கடந்த 2023-ல் UFC ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்ட முதல் இந்திய வீராங்கனையானார் பூஜா தோமர். இதைத்தொடர்ந்து தற்போது வெற்றி வாகை சூடி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

Tags:    

Similar News