விளையாட்டு (Sports)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றது சாத்விக்- சிராக் ஜோடி

Published On 2024-05-19 06:09 GMT   |   Update On 2024-05-19 06:09 GMT
  • இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது.
  • இதில் இந்திய ஜோடி 21-15, 21-15 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

பாங்காக்:

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சாத்விக்- சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில், சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Tags:    

Similar News