விளையாட்டு

காஞ்சீபுரத்தில் மாநில வாள்வீச்சு போட்டி

Published On 2022-07-27 10:31 GMT   |   Update On 2022-07-27 10:31 GMT
  • சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
  • மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

சென்னை:

தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சார்பில் மாநில வாள்வீச்சு (10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சீபுரத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் அங்குள்ள மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில் (அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம்) நடக்கிறது.

சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி. கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News