விளையாட்டு

100 கிராமை போகத் விரைவில் குறைப்பார்- பாஜக எம்.பி. ஹேம மாலினி சர்ச்சை கருத்து

Published On 2024-08-07 12:46 GMT   |   Update On 2024-08-07 12:46 GMT
  • எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
  • பெண்கள், கலைஞர்கள் என நம் அனைவருக்கும் இது ஒரு பாடம்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக இருக்கும் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக எம்பி ஹேம மாலினி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது விசித்திரமாக இருக்கிறது. எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். பெண்கள், கலைஞர்கள் என நம் அனைவருக்கும் இது ஒரு பாடம்.

100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக இருக்கும். அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என ஹேம மாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News