வினேஷ் போகத் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.. யோகேஷ்வர் தத்
- பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
- ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத் 2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதி சுற்று வரை சென்று 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தோடு நாடு திரும்பினார்.
இறுதிப் போட்டியில் விளையாட முடியாததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய வினேஷ் போகத், நாடு திரும்பியதும் மலியுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதோடு, சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்காக வினேஷ் போகத் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரரான யோகஷ்வர் தெரிவித்துள்ளார்.
"அவர் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் தவறு செய்ததாகக் கூறி ஒட்டுமொத்த தேசத்தின் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, இது ஒரு சதி என்று அவர் குறிப்பிட்டார், நாட்டின் பிரதமரைக் கூட குற்றம் சாட்டினார்."
"தகுதி நீக்கம் சரியான நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். எடை ஒரு கிராம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் விளையாட்டு வீரர்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள்," என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் யோகேஷ்வர் தத் தெரிவித்தார்.