தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத்துறை மூலம் நடவு செய்யப்படும்

Published On 2024-02-20 06:50 GMT   |   Update On 2024-02-20 06:50 GMT
  • காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

* தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.

* பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்.

* மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.

* பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு.

* 7 மாவட்டங்களில் வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித்திட்டத்திற்கு ரூ.110.59 கோடி நிதி ஒதுக்கீடு.

* பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத்துறை மூலம் நடவு செய்யப்படும்.

* 200 பனைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, உரிய கருவிகள் வழங்க ரூ.1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

* வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News