சென்னிமலை முருகன் கோவிலில் இன்று 17 ஜோடிகளுக்கு திருமணம்- உறவினர்களால் கலை கட்டிய கோவில் வளாகம்
- 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
- கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை மலை மேல் அமைந்துள்ள முருகன் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இன்று ஆவணி மாதத்தில் வருகின்ற முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 17 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் கோவிலை சுற்றி வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ, வீடியோ, செல்பி எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்களும் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில் கூடுதல் பணியாளர்கள் மூலம் கூட்டத்தினை சரி செய்தனர். திருமண ஜோடி மற்றும் அவர்கள் உறவினர்களால் மலை கோவில் வளாகம் காலை நேரத்தில் கலை கட்டி இருந்தது.