செய்திகள்

கனமழை எதிரொலி - மதுரை வழியாகச்செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

Published On 2018-08-16 04:47 GMT   |   Update On 2018-08-16 04:47 GMT
கனமழை காரணமாக மதுரை வழியாகச்செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #Expresstrains
மதுரை:

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இதனால் அந்த பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரெயில் போக்குவரத்து குறித்து மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசு வாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவனந்தபுரம் கோட்டத்தில் கனமழை காரணமாக அங்கமாலி, ஆலுவா பாலங்களில் வெள்ள நீர் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மும்பையில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381), ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக திருப்பி விடுப்பட்டு கன்னியாகுமரிக்கு செல்லும்.

இதேபோல் பெங்களூருவில் இருந்து நேற்று புறப்பட்ட ஜலண்டு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16526), சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரிக்கு செல்லும்.

மதுரை கோட்டத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே மண்சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கொல்லத்தில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த தாம்பரம் வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06028) போக்குவரத்தில் கொல்லம்-செங்கோட்டை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

புனலூரில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56365/ 56366) போக்குவரத்தில் கொல்லம் புனலூர் இடையிலான சேவை இருமார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Expresstrains

Tags:    

Similar News