கூடலூர் அருகே 25 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
- குமுளி பத்துமுறி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அந்தோணியை கைது செய்து ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் பண்டிகை நாட்களில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க இருமாநில போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இடுக்கி கலால் துணை ஆணையர் ஆபரகாம் அறிவுறுத்தலின்பேரில் எல்லைப்பகுதியில் ரோந்து பணி நடைபெற்றது.
அப்போது குமுளி பத்துமுறி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அந்தோணி(46) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தோணியை கைது செய்து ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டது.