தமிழ்நாடு

குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளையும் காணலாம்

காரில் போதைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது: 100 கிலோ பறிமுதல்

Published On 2023-11-02 06:03 GMT   |   Update On 2023-11-03 03:07 GMT
  • ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய வகையில் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கவுந்தபாடி, பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (32), அம்மாபேட்டை பூதப்பாடி பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித் ஆண்டனி (26), கோபி நல்லதம்பி நகரை சேர்ந்த வேலுச்சாமி (60) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வேலுச்சாமி, இளவரசனிடம் இருந்து குட்கா பொருட்களை பெற்று அதை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News