தமிழ்நாடு (Tamil Nadu)

 கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற 3 பேர் கைது

Published On 2023-05-11 06:48 GMT   |   Update On 2023-05-11 06:48 GMT
  • சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர்.
  • விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பி, பூண்டு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குணாவின் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று சின்னதம்பியை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் யுவராஜ், விக்னேசுவரன் ஆகிய 2 பேர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் மாதம் 22-ந் தேதி சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதப்படை போலீசார் அழகுராஜ், சிலம்பரசன் ஆகியோர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டனர்.

சம்பவத்தன்று இரவு ஆஸ்பத்திரியில் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்கள் மீது மிளகாய் பொடி தூவி கைதிகள் யுவராஜ், விக்னேசுவரனை வெட்டி கொலை செய்ய முயன்றது. அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பியின் ஆதரவாளர்கள் கைதிகளை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேடபட்டியை சேர்ந்த ஆனந்த(35), ராம சந்திரன்(36), சிலம்பரசன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News