தமிழ்நாடு

திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தது 7 ரெயில்கள் தாமதம்

Published On 2024-05-28 06:41 GMT   |   Update On 2024-05-28 06:41 GMT
  • ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயரை சரி செய்தனர்.
  • ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஜோலார்பேட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பெங்களூரில் இருந்து இரவு 8.18 மணிக்கு கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, புதுப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் என்ற இடத்தில் ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின் சப்ளை வரததாதல் ரெயில் நடுவழியில் நின்றது.

இதனால் சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் இறங்கி தண்டவாளப் பாதையில் சென்று பார்த்த போது உயர் மின்னழுத்த ஒயர் அறுந்து துண்டாகி தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது.


இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக திருப்பத்தூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயரை சரி செய்தனர்.

இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

இதனால் சேலம் மார்க்கத்தில் செல்லும் ரெயில்களான சென்னை-ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-கொரக்பூர் செல்லும் கொரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 7 ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News