தமிழ்நாடு
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் மீது வழக்கு
- உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.
- மத மோதல்களை தூண்டு வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை:
சென்னையை சேர்ந்தவர் இடும்பாவனம் கார்த்திக்(வயது 32). இவர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.