நத்தம் அருகே கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து
- சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறிவிருந்து நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னர்சங்கர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் முன்பு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட படையல் கறி விருந்து விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.