தமிழ்நாடு

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கரும்பு நிலுவைத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை- அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தகவல்

Published On 2022-08-08 17:55 GMT   |   Update On 2022-08-08 17:55 GMT
  • இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட குழு அமைப்பு.
  • கரும்பு அரவைப் பருவத்திற்கான முன்னேற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு.

வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், எதிர்வரும் 2022-23 அரவை பருவத்திலேயே முதலாவதாக எம்.ஆர்.கே, கள்ளக்குறிச்சி-1 மற்றும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தியினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மீதமுள்ள சுப்ரமணிய சிவா, சேலம் மற்றும் நேஷனல் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 2023-24 ஆம் அரவை பருவத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை கரும்பு விவசாயிகளிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் ஆலைகளை லாபகரமாக இயக்கிடும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆலைகளுக்கு தேவையான கரும்பு உற்பத்தியை மேம்படுத்த கரும்பு நடவு பரப்பளவு பெருக்கம் மற்றும் எதிர்வரும் அரவைப்பருவத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அரசு வழிவகைக்கடன் விரைவில் வழங்கப்பட்டு கரும்பு நிலுவைத்தொகை உடனடியக வழங்கிட துரித நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட அரசினால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

Tags:    

Similar News