தமிழ்நாடு

கடுமையாக நடந்துகொண்ட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர்- நமீதா புகார்

Published On 2024-08-26 06:01 GMT   |   Update On 2024-08-26 06:01 GMT
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன்.
  • கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

பாஜக உறுப்பினரும் நடிகையுமான நடிகை நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தார்.

அப்போது அதிகாரி ஒருவர் அவரிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்டார். கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டனர்.

தான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது.

இந்தியாவில் எந்த கோவிலிலும் தன்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News