தமிழ்நாடு

திமுக ஆட்சியில் அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா- ஜெயக்குமார்

Published On 2024-08-16 08:37 GMT   |   Update On 2024-08-16 08:37 GMT
  • அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள்.
  • அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்திற்கான காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

* அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.

* விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

* திமுக அரசு அம்மா உணவகத்தை நீர்த்து போக செய்துள்ளது.

* அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள்.

* அம்மா மருந்தகங்களை மூடி விட்டு முதல்வர் மருந்தகங்களை தொடங்குகின்றனர்.

* அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News