தமிழ்நாடு (Tamil Nadu)

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு- உள்துறை செயலாளர் மீது முதல்வர் அதிருப்தி

Published On 2024-05-31 15:50 GMT   |   Update On 2024-05-31 15:50 GMT
  • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News