தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஜூன் 4 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்

Published On 2023-06-02 06:46 GMT   |   Update On 2023-06-02 06:47 GMT
  • 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
  • கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.

சென்னை:

தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது. 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), கடலூர் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூர் (ஜூலை 23), அரியலூர் (ஜூலை 23), விருதுநகர் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நவ.19-ந் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News