தமிழ்நாடு

பாரம்பரிய கலை நயத்துடன் கட்டப்பட்ட விமான முனையம்

Published On 2023-12-31 07:11 GMT   |   Update On 2023-12-31 07:11 GMT
  • நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக திருச்சியில் கட்டப்பட்டுள்ளது.
  • 10 சர்வதேச விமானங்களும், 4 உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும். பின்புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக திருச்சியில் கட்டப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், 4 உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

பீக் ஹவர்ஸில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 60 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10 போர்டிங் பிரிட்ஜ்கள் இருக்கும். கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், ஆட்டோமேஷன் வசதிகள், வி.எச்.எப், ஏ.ஏ.ஐ. அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Tags:    

Similar News