தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவு- புதிய நடைமுறை விரைவில் அமல்

Published On 2023-11-23 14:14 GMT   |   Update On 2023-11-23 14:14 GMT
  • அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு.
  • விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி்னால் போதும்.

தமிழகத்தில், கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதியும்போது இனி பிரிபடாத பாக நிலத்திற்கு ஒரு தனி ஆவணம் கட்டடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாகப் பதியப்படும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் வரையிலான புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி்னால் போதும்.

Tags:    

Similar News